மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் துணிகரம் துப்பாக்கியால் சுட்டு ஓட்டலில் ரூ.1 லட்சம் கொள்ளை 3 பேர் பிடிபட்டனர்
மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் துப்பாக்கியால் சுட்டு ஓட்டலுக்குள் புகுந்த 3 பேர் அங்கிருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை கொள்ளை அடித்தனர்.
வசாய்,
பால்கர் மாவட்டம் அம்போலி அருகே உள்ள தானுடல் வாடி கிராமம் அருகே ஆகாஷ் என்ற பெயரில் ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டல் முன்பு நேற்றுமுன்தினம் அதிகாலை 3.30 மணி அளவில் கார் ஒன்று வந்து நின்றது. இந்த காரில் இருந்து 3 பேர் இறங்கி வந்தனர். பின்னர் அவர்களில் ஒருவர் திடீரென துப்பாக்கியால் ஓட்டலை நோக்கி சுட்டார். இதனால் ஓட்டலில் இருந்தவர்கள் பயந்து போய் ஒதுங்கினர்.
இதைத்தொடர்ந்து ஓட்டலுக்குள் புகுந்த 3 பேரும் கல்லாவில் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை கொள்ளை அடித்தனர்.
3 பேரும் சிக்கினர்
பின்னர் ஓட்டலில் இருந்தவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டிய படி பணத்துடன் தப்பி சென்றுவிட்டனர். இது பற்றி ஓட்டல் உரிமையாளர் காசா போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் படி போலீஸ் சூப்பிரண்டு தத்தாத்ரே ஷிண்டே ஓட்டலுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் மாவட்டத்திற்கு உட்பட்ட மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை சாவடி அமைத்து கண்காணிக்கும்படி உத்தரவிட்டார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story