முன்னாள் முதல்-மந்திரி நாராயண் ரானேக்கு கொரோனா


முன்னாள் முதல்-மந்திரி நாராயண் ரானேக்கு கொரோனா
x
தினத்தந்தி 2 Oct 2020 2:35 AM IST (Updated: 2 Oct 2020 2:35 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் அரசியல் தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை. மாநிலத்தை சேர்ந்த மந்திரிகள் பலர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

மும்பை,

மராட்டியத்தை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் அரசியல் தலைவர்களையும் விட்டு வைக்கவில்லை. மாநிலத்தை சேர்ந்த மந்திரிகள் பலர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் முன்னாள் முதல்-மந்திரியும், மூத்த பா.ஜனதா தலைவருமான நாராயண் ரானேயும் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்த தகவலை அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. நான் நலமாக உள்ளேன். டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி சில நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள உள்ளேன். என்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் உடல்நலனை கவனித்து கொள்ளவும். பொது வாழ்க்கைக்கு விரைவில் வருவேன்’ என்றார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நாராயண் ரானே மகன் நிலேஷ் ரானே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story