ஐ.என்.எஸ். விராட் போர்க்கப்பல் உடைபடாமல் காப்பாற்றப்படுமா? ரூ.100 கோடி தந்தால் விற்பதாக புதிய உரிமையாளர் அறிவிப்பு
இந்திய கடற்படையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஐ.என்.எஸ். விராட் விமானம் தாங்கி கப்பலை ரூ.100 கோடி தந்தால் விற்க தயாராக இருப்பதாக கப்பலை வாங்கியவர் அறிவித்துள்ளார்.
மும்பை,
ஐ.என்.எஸ். விராட் விமானம் தாங்கி கப்பல், கடந்த 1987-ம் ஆண்டு, இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. இது, 70 ஆண்டுகள் பழமையானது. 27 ஆயிரத்து 800 டன் எடை கொண்டது. கடந்த 2017-ம் ஆண்டு, கடற்படையில் இருந்து விடுவிக்கப்பட்டது.
பின்னர், கடந்த ஜூலை மாதம் இக்கப்பல் ஏலம் விடப்பட்டது. ஸ்ரீராம் குழுமம் சார்பில் அதன் தலைவர் முகேஷ் படேல் என்பவர் ரூ.38 கோடியே 54 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தார்.
அருங்காட்சியகமாக மாற்ற திட்டம்
இதற்கிடையே, விராட் கப்பலை உடைப்பதற்காக, குஜராத் மாநிலத்தில் ஆலங் என்ற இடத்தில் உள்ள கப்பல் உடைக்கும் தளத்துக்கு கடந்த வாரம் அனுப்பி வைத்தார்.
இந்த தகவலை கேள்விப்பட்டு, மும்பையை சேர்ந்த என்விடெக் மரைன் கன்சல்டண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அந்த கப்பலை விலைக்கு வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது. கப்பலை உடைப்பதை தடுப்பதுடன், அதை அருங்காட்சியகமாக மாற்ற திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், ரூ.100 கோடி தந்தால், கப்பலை விற்க தயாராக இருப்பதாக அதன் உரிமையாளர் முகேஷ் படேல் கூறியுள்ளார். நேற்று அவர் அளித்த பேட்டி வருமாறு:-
நாட்டின் மீதான பற்று காரணமாக, விராட் கப்பலை நான் வாங்கினேன். அதே தேசப்பற்று காரணமாக, என்விடெக் நிறுவனம் அதை அருங்காட்சியகமாக மாற்ற விரும்புவதால், விற்க சம்மதித்தேன்.
ரூ.100 கோடி
முதலில், ரூ.125 கோடி கேட்டேன். நோக்கம் நல்லதாக இருப்பதால், இப்போது ரூ.100 கோடிக்கு விற்க சம்மதித்துள்ளேன். ஆனால், முதலில் ராணுவ அமைச்சகத்திடம் இருந்து அந்த நிறுவனம் தடையில்லா சான்றிதழ் வாங்கினால்தான், நான் விற்க முடியும்.
இது ஒரு குறுகிய கால சலுகை மட்டுமே. நான் ஒரு வாரம்வரை தான் காத்திருப்பேன். அதற்குள் சான்றிதழ் வாங்காவிட்டால், கப்பலை உடைக்கத் தொடங்கிவிடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதே சமயத்தில், தடையில்லா சான்றிதழை விரைவில் வாங்கி விடுவோம் என்று என்விடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வி.கே.சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story