கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மும்பை மாநகராட்சி 72 ஆயிரம் ரெம்டிசிவிர் மருந்துகளை வாங்குகிறது


கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மும்பை மாநகராட்சி 72 ஆயிரம் ரெம்டிசிவிர் மருந்துகளை வாங்குகிறது
x
தினத்தந்தி 2 Oct 2020 2:47 AM IST (Updated: 2 Oct 2020 2:47 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோயாளிகளுக்கு சிகி்ச்சை அளிக்க வசதியாக மும்பை மாநகராட்சி 72 ஆயிரம் ரெம்டிசிவிர் மருந்தை வாங்க உள்ளது.

மும்பை,

மும்பையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதில் நேற்று முன்தினம் புதிய உச்சமாக 2 ஆயிரத்து 654 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டனர். இதனால் நோய் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்தது. பலி எண்ணக்கை 9 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மும்பை மாநகராட்சி 72 ஆயிரம் ரெம்டிசிவிர் மருந்து குப்பிகளை வாங்க உள்ளது.

நல்ல பலன்

இது குறித்து மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ரெம்டிசிவிர் மருந்தால் நல்ல பலன் கிடைப்பதால் அதை மாநகராட்சி வாங்க முடிவு செய்து உள்ளது.

முதல் கட்டமாக 10 ஆயிரம் ரெம்டிசிவிர் மருந்து குப்பிகளை வாங்கி உள்ளோம். இதில் 1,700 குப்பிகள் பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 1,200 குப்பிகள் செவன்ஹில்ஸ் ஆஸ்பத்திரிக்கும், தலா 800 குப்பிகள் கே.இ.எம்., சயான் மற்றும் நாயர் ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story