காங்கிரஸ், கூட்டணி வைக்க உகந்த கட்சி அல்ல குமாரசாமி கருத்து
காங்கிரஸ், கூட்டணி வைக்க உகந்த கட்சி அல்ல என்று குமாரசாமி கூறியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள சிரா மற்றும் ராஜராஜேஸ்வரிநகர் ஆகிய தொகுதிகளுக்கு வருகிற நவம்பர் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த இடைத்தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று முன்தினம், இடைத் தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என்று கூறினார். அதற்கு முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதா தளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமி பதிலளித்து தனது முகநூல் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சட்டசபை இடைத்தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி இல்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இதை நான் கவனித்தேன். காங்கிரசுடன் ஜனதாதளம் (எஸ்) கட்சி கூட்டணி வைக்க விரும்புகிறது என்று எங்காவது கூறியுள்ளதா?.
ஆதாயம் பெற வேண்டும்
கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. அப்போது காங்கிரஸ் தலைவர்கள் தான் தேவேகவுடாவின் வீட்டுக்கு வந்து கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்று கூறினர். காங்கிரஸ், கூட்டணி வைக்க உகந்த கட்சி அல்ல. எனது தலைமையில் நடைபெற்ற கூட்டணி ஆட்சியை கவிழ்த்தது காங்கிரஸ் தான். ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு வழங்கிய பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்களை அக்கட்சி இழுத்துக்கொண்டது.
மராட்டியத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் காங்கிரஸ் கூட்டணிக்கு ஏற்ற கட்சி அல்ல என்பது தெளிவாக தெரிய வருகிறது. காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்று எங்கள் கட்சித் தலைவர்கள் கூறமாட்டார்கள். கர்நாடகத்தில் கூட்டணி என்றால் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) தான் என்ற ஒரு உணர்வு யாருக்கும் வேண்டாம். அதேபோல் காங்கிரஸ் கட்சியினர், ஜனதாதளம் (எஸ்) மற்றும் தேவேகவுடாவின் பெயரை பயன்படுத்தி ஆதாயம் பெற வேண்டாம்.
இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story