மாவட்ட செய்திகள்

வெள்ள நிவாரணம் வழங்காததால் நடுரோட்டில் முட்செடிகளை போட்டு கிராம மக்கள் போராட்டம் + "||" + Villagers protest by putting thorns in the middle of the road as flood relief is not provided

வெள்ள நிவாரணம் வழங்காததால் நடுரோட்டில் முட்செடிகளை போட்டு கிராம மக்கள் போராட்டம்

வெள்ள நிவாரணம் வழங்காததால் நடுரோட்டில் முட்செடிகளை போட்டு கிராம மக்கள் போராட்டம்
பாகல்கோட்டை அருகே வெள்ள நிவாரணம் வழங்காததால், நடுரோட்டில் முட்செடிகளை போட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பாகல்கோட்டை,

வடகர்நாடக மாவட்டமான பாகல்கோட்டையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக உனகுந்தா தாலுகாவில் உள்ள அமராவதி உள்பட அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. வீடுகளையும் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த வீடுகளில் வசித்தவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.


இந்த நிலையில் முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தங்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.

போக்குவரத்து பாதிப்பு

இந்த நிலையில் நேற்று அமராவதி கிராமம் வழியாக செல்லும் சோலாப்பூர்- ஒசபேட்டே தேசிய நெடுஞ்சாலையில் முட்செடிகளை வெட்டி போட்டு அமராவதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் திடீரென போராட்டம் நடத்தினர். மேலும் வெள்ள நிவாரண நிதி வழங்குமாறு கோஷம் எழுப்பினர்.

இதுபற்றி அறிந்த உனகுந்தா புறநகர் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் நடத்தியவர்களை அனுப்பிவைத்தனர். பின்னர் சாலையில் போடப்பட்டிருந்த முட்செடிகளை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. கிருஷ்ணா, பீமா ஆறுகளில் தொடர் வெள்ள பெருக்கு ஒரு லட்சம் ஹெக்டேர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது
கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணா மற்றும் பீமா ஆறுகளில் தொடர் வெள்ள பெருக்கு காரணமாக ஒரு லட்சம் ஹெக்டேர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. மேலும் 150 கிராமங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2. திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
3. புதுச்சேரி மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம் கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்
புதுச்சேரி மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்துள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை