புதிதாக 489 பேருக்கு கொரோனா இதுவரை கொரோனாவுக்கு 525 பேர் உயிரிழப்பு
புதுவையில் புதிதாக நேற்று 489 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 525 ஆக உயர்ந்துள்ளது. 431 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
புதுச்சேரி,
மத்திய நிபுணர்கள் குழு அறிவுறுத்தலின்படி புதுவை மாநிலத்தில் நாள்தோறும் அதிகம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 153 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 489 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. நேற்று ஒரே நாளில் 431 பேர் குணமடைந்து உள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக இறப்பு விகிதம் குறைந்துள்ளது. புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 89 ஆயிரத்து 568 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 1 லட்சத்து 58 ஆயிரத்து 206 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது.
28 ஆயிரத்து 24 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களில் 4,994 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 1,764 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 3,230 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 22,505 பேர் குணமடைந்துள்ளனர்.
525 பேர் உயிரிழப்பு
புதுவையில் இதுவரை 525 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 445 பேர் புதுச்சேரியை சேர்ந்தவர்கள். 39 பேர் காரைக்காலையும், 41 பேர் ஏனாமையும் சேர்ந்தவர்கள் ஆவர். புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாகூர் பகுதியை சேர்ந்த 64 வயது முதியவரும், முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்த 53 வயது பெண்ணும் பலியாகி உள்ளனர்.
தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த கோரிமேடு இந்திராநகர் பகுதியை சேர்ந்த 58 வயது பெண்ணும், பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த 83 வயது முதியவரும் பலியாகி உள்ளனர்.
புதுவையில் உயிரிழப்பு 1.87 சதவீதமாகவும், குணமடைவது 80.31 சதவீதமாகவும் உள்ளது.
மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story