ராகுல்காந்தி, பிரியங்கா கைது: நாராயணசாமி, நமச்சிவாயம் கண்டனம்


ராகுல்காந்தி, பிரியங்கா கைது: நாராயணசாமி, நமச்சிவாயம் கண்டனம்
x
தினத்தந்தி 2 Oct 2020 4:19 AM IST (Updated: 2 Oct 2020 4:19 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி,

உத்தரபிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற சென்ற ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை அந்த மாநில போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். இது ஹிட்லர் ராஜ்ஜியம், காட்டு ராஜ்ஜியத்தை வெளிப்படுத்துகிறது. ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

நமச்சிவாயம்

பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உத்தரபிரதேச மாநிலத்தில் காமவெறி பிடித்த கயவர்களிடம் சிக்கி கற்பிழந்து உயிர் துறந்த தாழ்த்தப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறச்சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை காவல்துறையை ஏவிவிட்டு தடியால் தாக்கிய மதவெறி பிடித்த சர்வாதிகார ஆட்சி நடத்தும் பா.ஜ.க. அரசை நான் புதுச்சேரி மக்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றேன்.

பா.ஜ.க. ஆட்சியில் நடந்துகொண்டிருக்கும் அநியாயங்களையும், அக்கிரமங்களையும் தட்டிக்கேட்டு தொடர்ந்து ராகுல் காந்தி போராடி வருகிறார். உரிமைகளை மீட்டெடுக்க மக்கள் நடத்தும் போராட்டங்களை காவல்துறையின் அடக்குமுறையால் முறியடித்து விடலாம் என்று உத்தரபிரதேச அரசு தப்புக்கணக்கு போட்டுக்கொண்டிருக்கிறது. மாபெரும் மக்கள் சக்தி ஒன்று திரண்டு ஓரணியில் நின்று போராடினால் பா.ஜ.க.வின் மாய்மால கோட்டை வெகுவிரைவில் பொடிப்பொடி ஆகும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story