மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் ராம கோபாலன் உருவப்படத்திற்கு அஞ்சலி + "||" + Tribute to Rama Gopalan portrait in Thoothukudi

தூத்துக்குடியில் ராம கோபாலன் உருவப்படத்திற்கு அஞ்சலி

தூத்துக்குடியில் ராம கோபாலன் உருவப்படத்திற்கு அஞ்சலி
தூத்துக்குடியில் ராம கோபாலன் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் மறைந்த இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தூத்துக்குடி டூவிபுரம் 5-வது தெருவில் நடந்தது. மாவட்ட தலைவர் எஸ்.இசக்கிமுத்துக்குமார் தலைமை தாங்கினார். அமைப்பாளர் நாராயணராஜ் முன்னிலை வகித்தார். பா.ஜனதா தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ், இந்து வியாபாரி சங்க மாநில தலைவர் ஈசுவரன், செல்வம் பட்டர், தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை தலைவர் பாண்டியன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


இதே போன்று வடக்கு மண்டல இந்து முன்னணி சார்பில் சுந்தர் தலைமையில் அஞ்சலி செலுத்தினர். தூத்துக்குடி கே.வி.கே.நகர் பகுதியில் அரிகரன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட் டது. இதில் ரவி, ராஜா லிங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பா.ஜனதா

தூத்துக்குடி தெற்கு ஒன்றிய பா.ஜனதா சார்பில் புதுக்கோட்டையில் அலங்கரித்து வைக்கப்பட்ட ராம கோபாலன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நெல்லை மாவட்ட பா.ஜனதா பொறுப்பாளர் பாலாஜி, மாநில செயற்குழு உறுப்பினர் சந்தானகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.முனியசாமி, மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் எஸ்.பி.முனியசாமி, மாவட்ட துணைத்தலைவர் கலாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆறுமுகநேரி

ஆறுமுகநேரி மெயின் பஜாரில் இந்து முன்னணியினர் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் நெல்லை கோட்ட இந்து முன்னணி செயலாளர் சக்திவேல், தூத்துக்குடி மாவட்ட இந்து முன்னணி துணை தலைவர் கசமுத்து, திருச்செந்தூர் ஒன்றிய தலைவர் மாரிமுத்து, வடக்கு ஒன்றிய தலைவர் ராமசாமி, ஆறுமுகநேரி நகர தலைவர் வெங்கடேசன், ஆறுமுகநேரி இந்து வியாபாரிகள் சங்க தலைவர் சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பேயாக நடிக்கும் அஞ்சலி, யோகிபாபு
பூச்சாண்டி என்ற படத்தில் அஞ்சலி, யோகிபாபு பேயாக நடித்து வருகிறார்கள்.
2. திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் துரைக்கண்ணு படத்துக்கு அஞ்சலி
திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் துரைக்கண்ணு படத்துக்கு அஞ்சலி அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்பு.
3. வாணியம்பாடியில் அமைச்சர் துரைக்கண்ணு உருவபடத்துக்கு அஞ்சலி
வாணியம்பாடியில் அமைச்சர் துரைக்கண்ணு உருவபடத்துக்கு அஞ்சலி.
4. கொரோனாவால் மரணம் அடைந்த அமைச்சர் துரைக்கண்ணு உடல் அடக்கம் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் அஞ்சலி
கொரோனாவால் மரணம் அடைந்த அமைச்சர் துரைக்கண்ணு உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நடைபெற்றது. அவரது உடலுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
5. தூத்துக்குடியில் வீரமரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி
நாடு முழுவதும் வீரமரணம் அடைந்த போலீசாருக்கு, தூத்துக்குடியில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவுத்தூணில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை