கயத்தாறு அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி


கயத்தாறு அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 2 Oct 2020 5:26 AM IST (Updated: 2 Oct 2020 5:26 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே மின்கம்பத்தில் ஏறி மின்பழுதை நீக்க முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

கயத்தாறு,

கயத்தாறு அருகே உள்ள சிவஞானபுரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்லையா மகன் காளிராஜ் (வயது 28). சமையல் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் கிராமங்களில் நடைபெறும் விழாக்களுக்கும் சமையல் வேலை செய்து வந்தார்.

மேலும் அங்குள்ள வீடுகளில் திடீரென மின்சாரம் பழுது ஏற்பட்டால், அதனை சரிசெய்து கொடுப்பார். சில நேரங்களில் மின்கம்பத்தில் ஏறியும் மின்பழுதை நீக்குவார்.

சாவு

சம்பவத்தன்று, கிராமத்தில் ஏற்பட்ட மின்பழுதை நீக்க ஒரு மின்கம்பத்தில் காளிராஜ் ஏறினார். உச்சிக்கு சென்று பழுதை நீக்க முயன்றபோது, திடீரென்று அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் கீழே விழுந்து அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story