திருமணமான 15 நாட்களில் புதுமண பெண் மர்ம சாவு
திருமணமான 15 நாட்களில் புதுமண பெண் மர்மான முறையில் உயிரிழந்தார்.
தாம்பரம்,
சென்னை கிழக்கு தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள அகரம்தென், அண்ணா நகர் பிரதான சாலை ஜே.ஜே. நகர், முதல் தெருவைச் சேர்ந்தவர் செல்லப்பன்(வயது 54). இவருக்கும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சி.பகண்டை, ஒத்தவாடை தெருவைச் சேர்ந்த சுலோச்சனா(37) என்பவருக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அகரம் தென் கிராமத்தில் திருமணம் நடந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுலோச்சனாவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை, ஆஸ்பத்திரிக்கு போகலாம் என செல்லப்பன் அழைத்தும், அவர் மறுத்ததாகவும் பின்னர் வீட்டில் தூங்கிய சுலோச்சனா, நேற்று அதிகாலையில் பரிதாபமாக இறந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி செல்லப்பன் அளித்த புகாரின்பேரில் சேலையூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story