ஜெயலலிதா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார் அமைச்சர் பேட்டி


ஜெயலலிதா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார் அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 2 Oct 2020 5:57 AM IST (Updated: 2 Oct 2020 5:57 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கடத்தூர்,

கோபி ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு உள்பட்ட குள்ளம்பாளையம், வெள்ளாளபாளையம், நஞ்சை கோபி, பாரியூர் ஆகிய ஊராட்சிகளில் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு பூமிபூஜையும், வெள்ளாங்கோயிலில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 25 பயனாளிகளுக்கு கன்றுக்குட்டி வளர்ப்பு கடன் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு கடன் உதவி வழங்கினார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெயலலிதா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். கொரோனா காலத்தில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக தமிழக அரசை பிரதமர் மோடியே பாராட்டியுள்ளார். பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், தற்போது வரை அணையின் நீர்மட்டம் 101 அடியாகவே இருந்து வருகிறது.

நூலக காலிப்பணியிடம்

இதுவரை, அரசு பள்ளிகளில் 15 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மேலும், மாணவர்கள் சேர்க்கைக்கான கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. குறித்து அரசியல் கருத்து கூறுவது சரியாக இருக்காது. மேலும், ஓர் அறைக்குள் பேசும் பேச்சை வெளியே சொல்லக் கூடாது. பேசினால், அது அரசியல் நாகரீகம் இல்லை.

தமிழகத்தில் நீச்சல் குளங்கள் திறப்பது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும். நூலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறினார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் இதில், மாநில வர்த்தக அணிச்செயலாளர் சிந்துரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story