சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் தேயிலை தோட்டங்களில் உலாவரும் கருஞ்சிறுத்தை
சின்னமனூர் அருகே உள்ள ஹைவேவிஸ் தேயிலை தோட்டங்களில் உலா வரும் கருஞ்சிறுத்தையால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
சின்னமனூா்,
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேற்குத்தொடா்ச்சி மலையில் மேகமலை வன உயிரிகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலய பகுதியில் ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உட்பட்ட மணலாறு, அப்பர் மணலாறு, இரவங்கலாறு, வெண்ணியாறு, மகாராஜா மெட்டு ஆகிய மலை கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஹைவேவிஸ் பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் வேலை பார்த்து வருகின்றனர். மேகமலை வன உயிரிகள் சரணாலயத்தில் உள்ள யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, மான் போன்ற விலங்குகள் அடிக்கடி தேயிலை தோட்ட பகுதிகளுக்குவந்து செல்லும்.
இந்நிலையில் ஹைவேவிஸ் தேயிலை தோட்டங்களில் கருஞ்சிறுத்தை நடமாடுவதை அங்கு வசிக்கும் மலைக்கிராம மக்கள் சிலா் செல்போனில் படம் பிடித்துள்ளனர். இதுகுறித்து மலைக்கிராம மக்கள் கூறும் போது, ஆங்கிலேயா் காலத்திலிருந்து 4 தலைமுறைகளாக இங்கு வசித்து வருகிறோம். யானை, புலி, சிறுத்தை மற்றும் மான் என பலவகையான விலங்குகளை பாா்த்து இருக்கிறோம். ஆனால் கருஞ்சிறுத்தையை இதுவரையில் நாங்கள் பாா்த்ததில்லை. இதுதான் முதன் முறை. இது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே கருஞ்சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினா் கண்காணிக்க வேண்டும் என்றனா்.
இதுகுறித்து வனத் துறையினரிடம் கேட்டபோது, தற்போது கொரோனா ஊரடங்கின் காரணமாக சுற்றுலாப்பயணிகள் வருகை முற்றிலும் தடை பட்ட நிலையில் மேகமலை வன உயிரின கோட்டத்தில் வனவிலங்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்துள்ளது. மேகமலை வனப்பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருப்பது முன் பிருந்தே உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததாலும், பொதுமக்கள் நடமாட்டம் குறைந்ததாலும் அவை தேயிலை தோட்டங்களின் நடுவே சாவகாசமாக உலாவரும் நிலை உருவாகியுள்ளது. கருஞ்சிறுத்தை நடமாட்டத்தை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

Related Tags :
Next Story