கோவை தெற்கு மண்டல பகுதியில் ரூ.4 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்
கோவை தெற்கு மண்டல பகுதியில் ரூ.4 கோடியே 15 லட்சம் செலவில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
கோவை,
கோவை தெற்கு மண்டல பகுதிகளில் வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து திட்டங்களை தொடங்கி வைத்தார். 78-வது வார்டுக்குட்பட்ட தேவேந்திர வீதி, பிள்ளை வீதி, போயர் வீதி ஆகிய பகுதிகளில் மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் அமைக்கப்படுகிறது. வடக்கு ஹவுசிங் யூனிட் பகுதியில் ரூ.25 லட்சம் செலவில் உடற் பயிற்சி கூடம் அமைக்கப்படுகிறது. இந்த திட்டப்பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
77-வது வார்டுக்குட்பட்ட ரங்கசாமி காலனி மற்றும் ராஜரத்தினம் நகர் பகுதியில் ரூ.52 லட்சம் செலவிலும், ராமமூர்த்தி லிங்க் ரோடு பகுதியில் ரூ.40 லட்சம் செலவிலும் பிரைட் கார்டன் பகுதியில் ரூ.37 லட்சம் செலவிலும், கருப்பண்ணன் பாதை பகுதியில் ரூ.37 லட்சம் செலவிலும், அன்னை இந்திரா நகர் பகுதியில் ரூ.60 லட்சம் செலவிலும் தார்சாலை புதுப்பிக்கும் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
பாலாஜி நகர் மற்றும் சண்முக நகர் பகுதியில் ரூ.28 லட்சம், 78-வது வார்டு வடக்கு ஹவுசிங் யூனிட் பகுதியில் ரூ.32 லட்சம், 79-வது வார்டு லாலி ரோடு ராஜாத்தியம்மாள் லே-அவுட் முனியப்பன் கோவில் வீதியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டிலும் தார்சாலை புதுப்பிப்பதற்கான பூமி பூஜையையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். மொத்தம் ரூ.4 கோடியே 15 லட்சம மதிப்பீட்டில் இந்த திட்டப்பணிகள் நடைபெற உள்ளது.
கோவை சுகுணாபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இ-சேவை மையத்தினையும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அவர் கலந்துகொண்ட அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் அடங்கிய தொகுப்பையும் அமைச்சர் வழங்கினார்.இந்த நிகழ்ச்சிகளில் மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன், துணை கமிஷனர் எஸ்.மதுராந்தகி, மாநகராட்சி என்ஜினீயர் லட்சுமணன், தெற்கு மண்டல உதவி கமிஷனர் ரவி, உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story