சிறுவந்தாட்டில் துணை சுகாதார நிலையம், செவிலியர் குடியிருப்பு அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்


சிறுவந்தாட்டில் துணை சுகாதார நிலையம், செவிலியர் குடியிருப்பு அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 2 Oct 2020 8:07 AM IST (Updated: 2 Oct 2020 8:07 AM IST)
t-max-icont-min-icon

சிறுவந்தாட்டில் துணை சுகாதார நிலையம், செவிலியர் குடியிருப்பு கட்டிடத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் கண்டமங்கலம் ஒன்றியம் சிறுவந்தாட்டில் ரூ.25 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்பில் செவிலியர் குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவுக்கு, மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், முத்தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., கண்டமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் ராமதாஸ், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு துணை சுகாதார நிலையம் மற்றும் செவிலியர் குடியிருப்பு கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். விழாவில் விழுப்புரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், தாசில்தார் கணேஷ், அ.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் கவுரி பாலகிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் தண்டபாணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் குமரேசன், எம்.எஸ். ஆர்.முருகன், கோண்டூர் ஏழுமலை, பூவரசங்குப்பம் முருகன், ஒன்றிய மாணவரணி செயலாளர் ஏழுமலை, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் நெற்குணம் முருகன், ஒன்றிய பாசறை செயலாளர் முருகன், பட்டு கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், ஒப்பந்ததாரர் சங்கர், கூட்டுறவு சங்க தலைவர்கள் சங்கர், ராஜசேகர், மணிகண்டன், சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story