திருப்பத்தூரில் துணிகரம் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 43 பவுன் நகை, ரூ.85 ஆயிரம் திருட்டு தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை


திருப்பத்தூரில் துணிகரம் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 43 பவுன் நகை, ரூ.85 ஆயிரம் திருட்டு தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 2 Oct 2020 8:31 AM IST (Updated: 2 Oct 2020 8:31 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 43 பவுன் நகை, ரூ.85 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி-1-ல் வசிப்பவர் விநாயகம். (வயது 36). இவரது மனைவி ஜீவா (34). இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்கள். நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு கணவன்-மனைவி இருவரும் ஜீவாவின் பெற்றோரை பார்க்க வாணியம்பாடி, வள்ளிப்பட்டு கிராமத்திற்கு சென்றனர்.

வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் மெயின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த 43 பவுன் நகை மற்றும் ரூ.85 ஆயிரத்தை திருடி சென்றுவிட்டனர்.

நேற்று வீட்டுக்கு வந்த விநாயகம் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது நகை மற்றும் பணம் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் தாலுகா போலீசார் புகார் செய்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிந்துள்ள கைரேகைகளை பதிவு செய்தனர்.

நகை, பணம் திருடி சென்ற மர்ம நபர்களை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) ஜெகநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story