வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் மாநிலம் தழுவிய போராட்டம்


வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் மாநிலம் தழுவிய போராட்டம்
x
தினத்தந்தி 3 Oct 2020 5:35 AM IST (Updated: 3 Oct 2020 5:35 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பை,

மத்திய அரசு கொண்டு வந்து உள்ள வேளாண் மசோதாக்களை கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மராட்டியத்தில் காங்கிரஸ் கட்சியினர் வேளாண் மசோதாக்களை திரும்பபெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில காங்கிரஸ் தலைவர் பாலசாகேப் தோரட் தலைமையில் நாசிக் மாவட்டம் லாசல்காவில் போராட்டம் நடந்தது. அப்போது அவர், வேளாண் மசோதாக்களுக்கு எதிராக 2 கோடி விவசாயிகளிடம் கையெழுத்து பெற்று அதனை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மூலமாக ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும், என்றார்.

இதேபோல நாந்தெட்டில் மாநில பொதுப்பணித்துறை மந்திரி அசோக் சவான் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசு வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மாட்டு வண்டியில் பேரணியாக சென்றனர்.

மும்பையில் வேளாண் மசோதாக்களை கண்டித்து நடந்த அமைதி போராட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான், மந்திரிகள் அமித் தேஷ்முக், அஸ்லாம் சேக், மும்பை காங்கிரஸ் தலைவர் ஏக்நாத் கெய்க்வாட் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மந்திரிகள் யஷோமதி தாக்கூர், சுனில் கேதார், கே.சி. பட்வி, விஜய் வடடேடிவார், சாதிஜ் பாட்டீல், விஸ்வஜித் கதம் மற்றும் ராஜீவ் சதாம் எம்.பி. தலைமையில் போராட்டம் நடந்ததாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.

Next Story