செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 396 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 396 பேர் பாதிப்பு
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 396 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 396 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 358 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 33 ஆயிரத்து 470 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.

இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 561 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 327 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 255 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 32 ஆயிரத்து 822 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 30 ஆயிரத்து 653 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1,617 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 552 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 2 பேர் இறந்துள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 21 வயது ஆண், 24 வயது ஆண், 39 வயது ஆண், சாலமங்கலம் பகுதியை சேர்ந்த 36 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து இவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 157 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 22 ஆயிரத்து 262 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 21 ஆயிரத்து 65 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 875 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் இதுவரை 322 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் நேற்று 3 பேர் இறந்துள்ளனர்.

Next Story