‘முக கவசம் அணியாமல் வருபவர்களை ஆட்டோவில் ஏற்றக்கூடாது’ டிரைவர்களுக்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
‘முக கவசம் அணியாமல் வருபவர்களை ஆட்டோவில் ஏற்றக்கூடாது ’ என்று டிரைவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் ஆட்டோ டிரைவர்கள் மற்றும் ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும். ஓட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் குடிபோதையில் ஆட்டோவை இயக்கக் கூடாது. உங்களை நம்பி வரும் பொதுமக்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும். எந்தவொரு ஆட்டோ டிரைவரும் சட்ட விதிகளை மீறக்கூடாது, போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். வாகனம் பராமரித்தல், இயக்குதலிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
தற்போதுள்ள கொரோனா காலக்கட்டத்தில் உங்களை முதலில் தற்காத்துக்கொள்ள வேண்டும். அதுபோல் உங்கள் குடும்பத்தினரின் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும். ஆட்டோவில், பயணிகள் நெருக்கமாக பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும், அனைத்து ஆட்டோக்களிலும் கட்டாயம் சானிடைசர் வைத்திருக்க வேண்டும், முக கவசம் அணியாமல் வருபவர்களை ஆட்டோவில் ஏற்றக்கூடாது. மேலும் ஆட்டோ டிரைவர்கள் எந்த ஒரு குற்ற செயல்களிலும் ஈடுபட மாட்டோம், எந்தவொரு குற்றச் செயலுக்கும் துணை போகவும் மாட்டோம் என்று உறுதி ஏற்க வேண்டும். அதே நேரத்தில் குற்ற செயல்கள் ஏதேனும் நடந்தால் அதுபற்றி உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் பாராட்டி அவர்களுக்கு சாக்லெட், பேனா ஆகியவற்றை பரிசாக வழங்கினார். மேலும் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களை எச்சரிக்கை செய்து அவர்களில் 10 பேருக்கு இலவசமாக தலைக்கவசமும், அதுபோல் முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறி அவர்களுக்கு இலவசமாக முக கவசமும் வழங்கியதோடு அனைவரும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் துண்டு பிரசுரத்தையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, விழுப்புரம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, குமாரராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story