போலி சான்றிதழ் மூலம் பதவி உயர்வு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் தலைமை கணக்கர் பணிநீக்கம்
போலி சான்றிதழ் மூலம் பதவி உயர்வு பெற்ற விவகாரத்தில், ஆஞ்சநேயர் கோவில் தலைமை கணக்கர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
நாமக்கல்,
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு உள்ள உதவி ஆணையர் அலுவலகத்தில் தலைமை கணக்கராக பணியாற்றி வந்தவர் பெரியசாமி (வயது 55). கடந்த 1990-ம் ஆண்டில் தினக்கூலி அடிப்படையில் இவர் பணியில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று தலைமை கணக்கர் நிலைக்கு உயர்ந்தார்.
இவர் பதவி உயர்வு பெறுவதற்கு வேறு ஒரு நபரின் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழை போலியாக சமர்ப்பித்தாக உதவி ஆணையர் ரமேசுக்கு புகார் வந்தது. அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வின்போது அவரின் மதிப்பெண் சான்றிதழ் மாயமாகி இருந்தது தெரியவந்தது.
பின்னர் பெரியசாமி கொடுத்த மதிப்பெண் சான்றிதழின் பதிவு எண் மூலம் அரசு தேர்வுகள் துறை இயக்குனரகத்தில் சரி பார்த்தபோது, அந்த மதிப்பெண் சான்றிதழ் போலியானது என்பது உறுதியானது. இதையடுத்து பெரியசாமி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதனிடையே தற்போது தலைமை கணக்கர் பெரியசாமியை, பணி நீக்கம் செய்து கோவில் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story