வல்லநாடு அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


வல்லநாடு அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 4 Oct 2020 4:45 AM IST (Updated: 4 Oct 2020 12:04 AM IST)
t-max-icont-min-icon

வல்லநாடு அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

ஸ்ரீவைகுண்டம்,

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள வசவப்பபுரம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் வேம்பு ராஜ் (வயது 27). லாரி டிரைவர். இவரது மனைவி சண்முகலட்சுமி (25). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 மாத பெண் குழந்தை உள்ளது. சண்முகலட்சுமி கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று தனது வீட்டில் பின்புறம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் தற்கொலை குறித்து நெல்லை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story