காஞ்சிபுரத்தில் நேற்று 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


காஞ்சிபுரத்தில் நேற்று 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x

காஞ்சிபுரத்தில் நேற்று 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 20 வயது ஆண், சாலமங்கலம் பகுதியை சேர்ந்த 50 வயது ஆண், சோமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 43 வயது ஆண், 7 வயது சிறுவன் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து இவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 150 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 22 ஆயிரத்து 417 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 21 ஆயிரத்து 217 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 875 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் இதுவரை 325 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் நேற்று 3 பேர் இறந்துள்ளார்.

Next Story