காவேரிப்பாக்கம் பேரூராட்சி சார்பில் வீடு, வீடாக மரக்கன்றுகள் வழங்கும் விழா


காவேரிப்பாக்கம் பேரூராட்சி சார்பில் வீடு, வீடாக மரக்கன்றுகள் வழங்கும் விழா
x
தினத்தந்தி 4 Oct 2020 8:37 AM IST (Updated: 4 Oct 2020 8:37 AM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பாக்கம், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சி மற்றும் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

காவேரிப்பாக்கம்,

காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சி மற்றும் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் பொது இடங்களில் குப்பை கொட்டக் கூடாது என்றும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து கொடுக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதன்படி காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்கிய பொதுமக்களுக்கு 1,500 மரக்கன்றுகளை வீடு வீடாக சென்று பரிசாக செயல் அலுவலர் சரவணன் வழங்கினார். மேலும் சாலை ஓரங்களில் 535 மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், பரப்புரையாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கக்கூடாது எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Next Story