பிம்பலூரில் பயணிகள் நிழற்குடைக்குள் வைக்கப்பட்டுள்ள பாடையை அகற்ற கோரிக்கை
பிம்பலூரில் பயணிகள் நிழற்குடைக்குள் வைக்கப்பட்டுள்ள பாடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பிம்பலூர் கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகில் பயணிகள் நிழற்குடை உள்ளது. பஸ் நிறுத்தத்திற்கு வரும் பயணிகள், நிழற்குடையில் நின்றும், அமர்ந்தும் காத்திருந்து பஸ்களில் ஏறிச்செல்வது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை தொடர்ந்து மீண்டும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அந்த பகுதியில் இறந்தவர்களின் உடல்களை தூக்கிச்செல்ல பயன்படுத்தப்படும் இரும்பினால் செய்யப்பட்ட பாடை, அந்த நிழற்குடைக்குள் பல மாதங்களாக வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் யாரேனும் இறந்தால், அவருடைய உடலை பாடையில் வைத்து சுடுகாட்டுக்கு கொண்டு சென்று விட்டு, மீண்டும் அந்தப் பாடையைக் கொண்டு வந்து நிழற்குடையின் உள்ளேயே வைத்து விடுகின்றனர்.
இதனால் பஸ் நிறுத்தத்திற்கு வரும் பயணிகள், நிழற்குடைக்குள் செல்வதை தவிர்த்து வெயிலில் சிரமத்துடன் நின்று பஸ் ஏறிச்செல்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பயணிகள் நிழற்குடையில் வைக்கப்பட்டுள்ள பாடையை அகற்றி, வேறு இடத்தில் வைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story