தோகைமலை அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவி பலி
தோகைமலை அருகேகுளத்தில் மூழ்கி 4-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தார்.
தோகைமலை,
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே வடசேரி நடுத்தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி கோமதி. இந்த தம்பதிக்கு யுவஸ்ரீ (வயது 10) என்ற மகளும், பரணி (14) என்ற மகனும் உள்ளனர். இதில், யுவஸ்ரீ திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். பரணி அதே பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கால் பள்ளிக்கு செல்லாமல் இருவரும் வீட்டில் இருந்து வந்தனர்.
இந்தநிலையில் பால்ராஜ் நேற்று வழக்கம்போல் மளிகை வியாபாரத்திற்கு சென்று விட்டார். கோமதி தங்களது குழந்தைகளை வீட்டில் இருக்கும்படி கூறிவிட்டு, அருகில் உள்ள வங்கிக்கு சென்று உள்ளார். அப்போது வீட்டில் இருந்த பரணி மற்றும் யுவஸ்ரீ ஆகிய இருவரும் பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு இருந்து உள்ளனர்.
பின்னர் அருகில் உள்ள வடசேரி பெரியகுளத்திற்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக மாணவி யுவஸ்ரீ சென்றதாக தெரிகிறது. வெகுநேரம் ஆகியும் தனது தங்கை யுவஸ்ரீயை காணவில்லை என்று பரணி குளத்திற்கு சென்று பார்த்து உள்ளான். அப்போது பெரியகுளத்தில் யுவஸ்ரீ மூழ்கி தத்தளித்து கொண்டு இருந்தாள். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பரணி காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என கூச்சல் போட்டு உள்ளான். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, பெரியகுளத்தில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்த யுவஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி யுவஸ்ரீ பரிதாபமாக இறந்தாள். இதுகுறித்து யுவஸ்ரீயின் தந்தை பால்ராஜ் தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே பெரியகுளத்தில் மூழ்கி ஏற்கனவே 2 குழந்தைகள் இறந்துள்ளனர். தற்போது 3-வது முறையாக 4-ம் வகுப்பு மாணவி மூழ்கி இறந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வடசேரி பெரியகுளத்தின் வடக்கு பகுதியில் அரசு உயர்நிலை பள்ளிக்கு செல்லும் சாலையில் பெரியகுளத்தை ஒட்டி தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Tags :
Next Story