இசை கல்லூரி முன்னாள் மாணவர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நினைவஞ்சலி


இசை கல்லூரி முன்னாள் மாணவர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நினைவஞ்சலி
x
தினத்தந்தி 5 Oct 2020 5:15 AM IST (Updated: 5 Oct 2020 12:47 AM IST)
t-max-icont-min-icon

இசை கல்லூரி முன்னாள் மாணவர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.

சென்னை,

சென்னையில் உள்ள தமிழ்நாடு இசை கல்லூரி 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 71 ஆண்டுகளாக சிறந்த இசை கலைஞர்களையும், இசை ஆசிரியர்களையும் உருவாக்கி ஒரு கலைக்கூடமாக திகழ்கிறது. இந்த கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் இசை கல்லூரி வளாகத்தில் மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

மாலை அணிவித்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உருவப்படத்துக்கு, இசை கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் துக்கத்தை அனுசரிக்கும் வகையில் இசை கல்லூரி முன்னாள் மாணவர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தார்கள்.

Next Story