தாராவியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 22 பேருக்கு தொற்று
தாராவியில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று ஒரே நாளில் அங்கு 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவியில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா தொற்று அசுர வேகத்தில் பரவியது. அதன்பிறகு அங்கு நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கங்களில் தான் இருந்து வந்தது.
தற்போது அங்கு மீண்டும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. தினமும் 10-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
22பேர் பாதிப்பு
இந்தநிலையில் தாராவியில் நேற்று 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 239 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 2 ஆயிரத்து 772 பேர் குணமடைந்துவிட்டனர். தற்போது 176 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாராவியில் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மாநகராட்சி வெளியிடுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல நேற்று தாதரில் 26 பேருக்கும், மாகிமில் 31 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை முறையே 3 ஆயிரத்து 785, 3 ஆயிரத்து 358 ஆக உயர்ந்து உள்ளது.

Related Tags :
Next Story