பாகல்கோட்டை அருகே காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை


பாகல்கோட்டை அருகே காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 5 Oct 2020 3:11 AM IST (Updated: 5 Oct 2020 3:11 AM IST)
t-max-icont-min-icon

பாகல்கோட்டை அருகே தங்கும் விடுதியில் காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

பாகல்கோட்டை,

பாகல்கோட்டை மாவட்டம் முதோல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 23) . இவர் முதோல் டவுனில் உள்ள பேக்கரி கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் ஆனந்த்துக்கும், அவரது கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

இந்த நிலையில் முதோல் டவுனில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ஆனந்தும், அவரது காதலியான சிறுமியும் தங்கி இருந்து உள்ளனர். நேற்று காலை தங்கியிருந்த அறையில் ஆனந்தும், சிறுமியும் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில் நீண்ட நேரம் ஆகியும் 2 பேரும் வெளியே வராததால், விடுதி ஊழியர்கள் கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் ஜன்னல் வழியாக விடுதி ஊழியர்கள் எட்டிப்பார்த்தனர். அப்போது காதலர்கள் 2 பேரும் தூக்கில் பிணமாக தொங்கினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விடுதி ஊழியர்கள், முதோல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

விசாரணை

அதன்பேரில் அங்கு வந்த போலீசார் தூக்கில் தொங்கிய ஆனந்த், சிறுமியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் ஆனந்தும், அவரது காதலியான சிறுமியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

ஆனால் அவர்கள் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதற்கிடையே தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஆனந்த் தனது செல்போனில் வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் ‘ஆல் பிரெண்ட்ஸ் ஐ மிஸ் யூ’ என்று பதிவு செய்து இருந்தார். காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது குறித்து முதோல் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story