கிராம யோஜனா திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மக்களுக்கான நலப்பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்


கிராம யோஜனா திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மக்களுக்கான நலப்பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 5 Oct 2020 3:45 AM IST (Updated: 5 Oct 2020 3:45 AM IST)
t-max-icont-min-icon

கிராம யோஜனா திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மக்களுக்கான நலப்பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்.

அரியாங்குப்பம்,

மத்திய அரசின் பிரதம மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் நலத்துறை வழிகாட்டுதல்படி ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதிகளான அபிஷேகப்பாக்கம், ஜி.என். பாளையம் கிராம மக்கள் வளர்ச்சிக்கு திட்டங்களை தயாரிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் நலத்துறை நல ஆய்வாளர் செந்தில், கால்நடைத்துறை மருத்துவர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பிரதம மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட மக்களுக்கு தேவையான வளர்ச்சி பணி தொடர்பாக திட்டங்கள் தயாரிக்கப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டது.

கூட்டத்தில் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் கண்ணன், கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் யுவராஜ், இளநிலை பொறியாளர் ரகுராம், வருவாய் அலுவலர்கள் மற்றும் அபிஷேகப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு ஆணையர் சவுந்தரராஜன் மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.

Next Story