சுரண்டை அருகே ‘அம்மா’ நகரும் ரேஷன் கடை செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
சுரண்டை அருகே ஏந்தலூரில் கிடாரக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் ‘அம்மா’ நகரும் ரேஷன் கடை தொடங்கப்பட்டது.
சுரண்டை,
சுரண்டை அருகே ஏந்தலூரில் கிடாரக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் ‘அம்மா’ நகரும் ரேஷன் கடை தொடங்கப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, அம்மா நகரும் ரேஷன் கடையை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கினார். விழாவில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் என்.எச்.எம்.பாண்டியன், தாய்க்குலம் கருப்பசாமி, தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கருப்பசாமி, விற்பனையாளர் சண்முகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாவூர்சத்திரத்தில் மாற்று கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடந்தது. இலஞ்சி பகுதியைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த் ஆறுமுகம், பா.ஜ.க.வைச் சேர்ந்த இசக்கிமுத்து, தி.மு.க.வைச் சேர்ந்த சரவணன், கதிரவன், அ.ம.மு.க.வைச் சேர்ந்த மாரி வெங்கடேஷ், முருகானந்த் உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சிகளைச் சேர்ந்த 100 பேர் அக்கட்சிகளிலிருந்து விலகி, மாவட்ட செயலாளர் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் சங்கரபாண்டியன், அமல்ராஜ், இருளப்பன், இலஞ்சி நகர செயலாளர் மயில்வேலன், முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் காத்தவராயன், அரசு ஒப்பந்ததாரர் சண்முகவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story