தூத்துக்குடியில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. த.மு.மு.க. மாவட்ட செயலாளர் அசன் தலைமை தாங்கினார். எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட செயலாளர் மைதீன் கனி முன்னிலை வகித்தார். தமிழக வாழ்வுரிமை கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் கிதர்பிஸ்மி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக தமிழர் விடியல் கட்சி மாவட்ட பொறுப்பாளர் சந்தனராஜ், புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட செயலாளர் சுஜீத், ஆதித்தமிழர் பேரவை மாநில துணை பொதுச் செயலாளர் அருந்ததி அரசு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
வேளாண் மசோதா
மத்திய அரசு கொண்டு வந்து உள்ள வேளாண் மசோதாக்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும். மாநில அரசு இந்த மசோதாக்களுக்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி செயலாளர் மாரிசெல்வம், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தாஸ், இந்திய தேசிய லீக் மாவட்ட செயலாளர் சாதிக் பாட்சா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஜாகீர் உசேன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

Related Tags :
Next Story