கிழக்கு தாம்பரத்தில் வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு


கிழக்கு தாம்பரத்தில் வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 5 Oct 2020 5:34 AM IST (Updated: 5 Oct 2020 5:34 AM IST)
t-max-icont-min-icon

கிழக்கு தாம்பரத்தில் வீடு புகுந்து 10 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம், திருமங்கை மன்னன் தெருவைச் சேர்ந்தவர் பிரபு. இவர், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டார். மர்மநபர்கள் இவரது வீட்டின் பின்பக்க கதவை நைசாக திறந்து உள்ளே புகுந்தனர். பின்னர் மாடியில் உள்ள அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகைகளை திருடிச்சென்று விட்டனர். இது குறித்து சேலையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் சென்னையை அடுத்த கீழ்கட்டளை பாலாஜி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் மனோகர மோகன் (வயது 72). இவர், திருச்சியில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் சொந்த ஊரான வள்ளியூர் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார்.

அப்போது மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரத்தை திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story