கமுதி அருகே மழை வேண்டி ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா - ஆடுகள் பலியிட்டு கறிவிருந்து நடந்தது


கமுதி அருகே மழை வேண்டி ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா - ஆடுகள் பலியிட்டு கறிவிருந்து நடந்தது
x
தினத்தந்தி 5 Oct 2020 9:27 AM IST (Updated: 5 Oct 2020 9:27 AM IST)
t-max-icont-min-icon

கமுதி அருகே மழை வேண்டி ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா நடந்தது. இதில் ஆடுகள் பலியிடப்பட்டு கறிவிருந்து வழங்கப்பட்டது.

கமுதி,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழா 3 தலைமுறைகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் 2-வது வாரத்தில் திருவிழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதன்படி நேற்று திருவிழா நடந்தது. இதில் விவசாயத்தில் நல்ல மகசூல் வேண்டியும், மழை வேண்டியும் சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

திருவிழாவில் 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் நேர்த்திக்கடனாக பலியிடப்பட்டன. இந்த வினோத வழிபாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் கறி விருந்து வழங்கப்பட்டது.

இந்த திருவிழாவில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. திருவிழா முடிந்து கறி விருந்து மீதியை அங்கேயே புதைத்துவிட்டு சென்றனர். திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்துகொண்டனர்.


Next Story