விளையாட்டு விபரீதமானது: தொட்டில் சேலை கழுத்தில் இறுக்கி 8-ம் வகுப்பு மாணவன் பலி
வாடிப்பட்டி அருகே தொட்டில் சேலையில் விளையாடியபோது கழுத்தில் சேலை இறுக்கி 8-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
வாடிப்பட்டி,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ராயபுரம் மேற்குதெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி செல்வி. இவர்களது மகன் பிரகாஷ்(வயது 13). 8-ம் வகுப்பு படித்துள்ளான். இந்தநிலையில் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அங்கப்பன்கொட்டத்தில் உள்ள பாட்டி செல்லம்மாள் வீட்டிற்கு பிரகாஷ் சென்று இருந்தான்.
அங்கு செல்வியின் தம்பி அருணின் 8 மாத குழந்தைக்காக சேலையில் தொட்டில் கட்டப்பட்டு இருந்தது. நேற்று மதியம் 12 மணிக்கு அந்த தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை அழுததால், அருணின் மனைவி நிவேதா குழந்தையை தொட்டிலில் இருந்து எடுத்து பால் கொடுக்க தூக்கி சென்றார்.
அப்போது அந்த தொட்டில் சேலையில் ஏறி பிரகாஷ் விளையாடினான். அப்போது எதிர்பாராதவிதமாக சேலையை சுற்றி, சுற்றி ஊஞ்சல் போல் விளையாடி கொண்டிருந்தான். இதில் எதிர்பாராதவிதமாக பிரகாஷ் கழுத்தை சேலை இறுக்கியது. அதை கழற்ற முயன்றும் அவனால் முடியவில்லை.
இதனால் மயங்கி விழுந்த பிரகாசை உடனடியாக மீட்டு வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியில் அவன் பரிதாபமாக இறந்தான். இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின், சப்-இன்ஸ்பெக்டர் கேசவராமச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொட்டில் சேலையில் ஊஞ்சல் போல் ஏறி உட்கார்ந்து விளையாடிய விளையாட்டு சிறுவனின் உயிரை பறித்து விபரீதத்தில் முடிந்துள்ளது. சிறுவனின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுத காட்சி கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. மேலும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது.

Related Tags :
Next Story