ஏற்காட்டில் தம்பதி உள்பட 3 பேர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது - பரபரப்பு வாக்குமூலம்
ஏற்காட்டில் தம்பதி உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஏற்காடு,
ஜார்கண்ட் மாநிலம் கூட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோண்டாபகன் (வயது 41). இவருடைய மனைவி சுதிகேன்ஸ் (36). இவர்கள் இருவரும் ஏற்காட்டில் உள்ள ஒரு எஸ்டேட்டில் கூலி வேலை செய்து வந்ததுடன், அங்குள்ள பணியாளர் குடியிருப்பில் வசித்து வந்தனர்.
இவர்களின் உறவினர் ஹைரா போத்ரே என்பவர் திருப்பூரில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு அவர் ஏற்காட்டுக்கு வந்தார். அங்கு அவர் கோண்டாபகன்-சுதிகேன்ஸ் குடியிருப்பிற்கு அருகில் உள்ள வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி இரவு கோண்டாபகன் தலையில் வெட்டப்பட்டும், சுதிகேன்ஸ் கழுத்தறுக்கப்பட்டும் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அதே நேரத்தில் ஹைரா போத்ரே காணாமல் போய் இருந்தார்.
இந்த பயங்கர இரட்டை கொலை சம்பவம் குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். அதே நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளிகளான சுக்ரான், ராம்நாத் மற்றும் முச்சுராய் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
ஏற்காடு எஸ்டேட்டில் வேலை செய்து வந்த பூத்ரான் (29) என்ற தொழிலாளியின் மனைவி கர்ப்பமாக இருந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்குமுன்பு சுதிகேன்ஸ், பூத்ரானின் கர்ப்பிணி மனைவிக்கு நாட்டு மருந்து கொடுத்துள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக கர்ப்பிணி இறந்து விட்டார். தனது மனைவி சாவுக்கு சுதிகேன்ஸ் குடும்பம் தான் காரணம் என நினைத்து அவர்களை பழி வாங்க பூத்ரான் திட்டமிட்டார்.
அவர் தனது கூட்டாளிகளான அதே எஸ்டேட்டில் வேலை பார்த்த தொழிலாளிகளான சுக்ரான், ராம்நாத், முச்சுராய் மற்றும் ஹைரா போத்ரே ஆகியோருடன் சேர்ந்து தம்பதியை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஹைரா போத்ரே தவிர்த்து மற்ற 3 பேரையும் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
அதே நேரத்தில் பூத்ரான் மற்றும் ஹைரா போத்ரே ஆகியோர் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று முன்தினம் அதே எஸ்டேட்டில் ஹைரா போத்ரேவின் உடல் அழுகிய நிலையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டது. அவரும் படுகொலை செய்யப்பட்டது அதன்பிறகு தான் தெரிய வந்தது.
இதை தொடர்ந்து பூத்ரானை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று அதிகாலை 4 மணி அளவில் கொலை நடந்த அதே எஸ்டேட் பகுதியில் பூத்ரானை ஏற்காடு போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கோண்டாபகன்-சுதிகேன்ஸ் தம்பதியை சுக்ரான், ராம்நாத், முச்சுராய் மற்றும் ஹைரா போத்ரேவுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் ஹைரா போத்ரே தான் மாட்டிக்கொள்வேன் என புலம்பியதால் அவரையும் கொன்றதாகவும் பூத்ரான் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனது மனைவி கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கர்ப்பிணியாக இருந்தார். அப்போது எஸ்டேட்டில் உடன் வேலை பார்க்கும் சுதிகேன்ஸ் எனது மனைவிக்கு நாட்டு மருந்து கொடுத்தார். ஆனால் அந்த மருந்தை சாப்பிட்ட எனது மனைவி திடீரென இறந்து விட்டார். எனது மனைவியின் சாவுக்கு காரணமான சுதிகேன்ஸ் குடும்பத்தினரை கொலை செய்ய திட்டமிட்டேன்.
இதையடுத்து கடந்த 29-ந் தேதி இரவு எனது கூட்டாளிகளான சுக்ரான், ராம்நாத், முச்சுராய் ஆகியோருடன் சுதிகேன்ஸ் வீட்டின் அருகே காத்திருந்தேன். அப்போது சுதிகேன்ஸ்-கோண்டாபகன் தம்பதியின் உறவினரும், எங்களின் கூட்டாளியுமான ஹைரா போத்ரே எங்களுக்கு சிக்னல் கொடுக்கும் வகையில் இந்தி பாடல்களை சத்தமாக ஒலிபரப்பினார்.
உடனே நாங்கள் அங்கு விரைந்து சென்று அந்த தம்பதியை வெட்டி படுகொலை செய்தோம். அதே நேரத்தில் ஹைரா போத்ரே மாட்டிக்கொள்வோம் என்று பயந்து எங்களிடம் புலம்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் அவரையும் வெட்டி கொன்று எஸ்டேட்டில் புதைத்து விட்டு தப்பி ஓடிவிட்டோம். பின்னர் தலைமறைவாக இருந்த எனது கூட்டாளிகள் போலீசில் பிடிபட்ட நிலையில் நானும் மாட்டிக்கொண்டேன். இவ்வாறு அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதை தொடர்ந்து பூத்ரான் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Tags :
Next Story