மலாடு தமிழர் சங்க இருபெரும் விழா ஒர்லத்தில் நடந்தது


மலாடு தமிழர் சங்க இருபெரும் விழா ஒர்லத்தில் நடந்தது
x
தினத்தந்தி 6 Oct 2020 2:40 AM IST (Updated: 6 Oct 2020 2:40 AM IST)
t-max-icont-min-icon

மலாடு தமிழர் சங்க இருபெரும் விழா ஒர்லத்தில் நடந்தது.

மும்பை,

மலாடு தமிழர் நல சங்கத்தின் 7-வது ஆண்டு விழா, மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் இருபெரும் விழா நேற்று முன்தினம் ஒர்லம் வல்லனை காலனி பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் நடந்தது. விழாவுக்கு பாரதியார் கூட்டுறவு வங்கி தலைவர் அமுதா தலைமை தாங்கினார். தெட்சணமாற நாடார் சங்க மும்பை கிளை செயலாளர் காசிலிங்கம், தங்கதுரை, ஆவுடையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சங்க இணைச்செயலாளர் முருகன் வரவேற்று பேசினார். தலைவர் பாஸ்கரன் தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினர்கள் சங்க செயல்பாடுகளை வாழ்த்தி பேசினர்.

மாணவர்களுக்கு உதவி

தொடர்ந்து கொரோனா பிரச்சினையின் போது சமூக பணிகளில் ஈடுபட்ட சங்க மகளிர் அணி தலைவி பாக்கிய லெட்சுமி, நிர்வாகிகள் முருகன், சிவகொழுந்து ஆகியோரை பாராட்டி நினைவு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். மேலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்க தொகை, நினைவு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உறுப்பினர் சிவபிரகாஷ் நன்றி கூறினார்.

Next Story