உத்தரபிரதேச சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
உத்தரபிரதேச சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
காஞ்சீபுரம்,
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, உயிரிழந்ததை கண்டித்து காஞ்சீபுரம் சங்கரமடம் எதிரே உள்ள பெரியார் சிலை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் பாசறை செல்வராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட காஞ்சி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஜி.வி மதியழகன், ம.தி.மு.க. உள்ளிட்ட தோழமை கட்சிகளை சேர்ந்தவர்கள் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல், காஞ்சீபுரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் காஞ்சீபுரம் காந்தி ரோடு பெரியார் தூண் முன்பு மாவட்ட தலைவர் அசோகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.க, தி.மு.க. மகளிரணி நிர்வாகிகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story