நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2020 5:02 AM IST (Updated: 6 Oct 2020 5:02 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

நெல்லை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பது நாளை (புதன்கிழமை) அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விஜயநாராயணம் பாசன கால்வாய் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சங்க தலைவர் முருகன் தலைமை தாங்கி, பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். மீண்டும் அவர் முதல்-அமைச்சராக வந்தால் விவசாயிகளுக்கு சிறப்பு திட்டங்களை அமல்படுத்துவார். அதனால் தான் நாங்கள், முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்“ என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜயநாராயணம் பாசன குளத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story