மாவட்ட செய்திகள்

நெல்லை அருகே செயல்படும் கல்குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் கலெக்டரிடம், கிராம மக்கள் மனு + "||" + Petition of the villagers to the Collector to revoke the license of the quarries operating near Nellai

நெல்லை அருகே செயல்படும் கல்குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் கலெக்டரிடம், கிராம மக்கள் மனு

நெல்லை அருகே செயல்படும் கல்குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் கலெக்டரிடம், கிராம மக்கள் மனு
நெல்லை அருகே செயல்படும் கல்குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும், என்று கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் கோரிக்கை மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அந்த பெட்டியில் நேற்று ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை போட்டு சென்றனர்.


நாங்குநேரி அருகே உள்ள உன்னங்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஸ்ரீரங்கபுரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுவை கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் ஊரில் சுமார் 10 ஏக்கர் நத்தம் புறம்போக்கு நிலம் இருந்தது. அந்த நிலத்தை அதிகாரிகள் எங்களுக்கு பட்டா போட்டு தருவதாக கூறினர். ஆனால் அந்த நிலத்தை நகர பஞ்சாயத்து மக்களுக்கு பட்டா போட்டுக் கொடுத்து விட்டனர். அந்த நிலத்தை மீட்டு எங்கள் ஊரைச் சேர்ந்தவர்களுக்கு பட்டா போட்டு கொடுக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டு இருக்கிறது.

முற்றுகை போராட்டம்

காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் நெல்லை மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் கரிசல் சுரேஷ், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார், எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த அலாவுதீன், ஜிந்தா, ம.தி.மு.க.வைச் சேர்ந்த அகஸ்டின் பெர்னாண்டஸ், தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்த தமிழரசு உள்பட பலர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

அப்போது, அவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், ‘சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து தென்காசி மாவட்டம் மணக்கரையைச் சேர்ந்த முத்து என்பவர் கொலை செய்யப்பட்டார். அதேபோல் திருப்பூர் நல்லூர் போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அவற்றைக் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டு உள்ளது.

கல்குவாரி உரிமத்தை...

நெல்லை அருகே உள்ள அரியநாயகிபுரம் பஞ்சாயத்து தாளார்குளம் ஊர் நல கமிட்டி சார்பில் கிராம மக்கள் கொடுத்த மனுவில், தாளார்குளம் அருகில் 2 கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல் குவாரிகளில் இருந்து வெடி பொருட்கள் மூலம் பாறைகளை உடைக்கும்போது தாளார்குளம், சிங்கம்பாறை, இலந்தைகுளம் ஆகிய 3 கிராமங்களில் உள்ள வீடுகளில் அதிர்வுகள் ஏற்படுகின்றன. மேலும் பல வீடுகளின் சுவர்கள் விரிசல் விழுந்துள்ளது. இந்த கல்குவாரிகள் தொடர்ந்து செயல்பட்டால் வீடுகள் இடிந்து விழும் அபாயம் ஏற்படும். மேற்கண்ட 3 கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். பொதுமக்களின் நலன் கருதி அந்த கல் குவாரிக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

போலி ரசீது

தமிழ்த் தேசிய கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் ஆரோன் செல்லத்துரை தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், நாங்குநேரி தாலுகா கரந்தநேரி பஞ்சாயத்தில் வீட்டுமனை வரைபட ஒப்புதல் மற்றும் வீட்டுமனை தீர்வு ரசீது போலியாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு அந்த பகுதியைச் சேர்ந்த அரசு அதிகாரிகளும், பஞ்சாயத்து அலுவலர்களும் உடந்தையாக இருக்கிறார்கள். இதுகுறித்து போலீசாரிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தாங்கள் இந்த பிரச்சினையில் தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

நெல்லை மாவட்ட நகை தொழிலாளர்கள் பாதுகாப்பு பேரவை (சி.ஐ.டி.யூ. இணைப்பு) சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘நெல்லை டவுனை சேர்ந்த நகை தொழிலாளர்கள் 3 பேர் சேர்ந்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் தங்க நகைகளை அடகு வைத்து விட்டு திருப்ப முடியாத வாடிக்கையாளர்களின் நகைகள் மூழ்கும் நிலையில் உள்ளதை மீட்டுக் கொடுத்து அதற்கேற்ப கமிஷன் பெற்று தொழில் செய்து வருகிறார்கள். அவர்கள் 3 பேரையும் பாளையங்கோட்டையை சேர்ந்த ஒருவர் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டார். அந்த பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது.

பொதுப் பாதை

பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், ‘பேட்டை ஐ.டி.ஐ. தொழில் பயிற்சி நிறுவனம் அருகே ஒரு பொதுப் பாதை உள்ளது. அந்த பாதையை நாங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலையில் அந்த பொதுப் பாதையை ஐ.டி.ஐ. நிறுவனம் திடீரென்று அடைத்துவிட்டது. இதனால் நாங்கள் அந்த வழியாக செல்ல முடியவில்லை. வழக்கம்போல பொதுப் பாதையை திறந்து விட வேண்டும்’ என்று கோரிக்கை விடப்பட்டது.

மேலப்பாளையம் நவாப் குத்பா ஜூம்மா பள்ளி, தண்டன் ஜூம்மா பள்ளி, ஜாமிஉல் அக்பர் ஜூம்மா மற்றும் வாவர் ஜூம்மா பள்ளி ஆகிய ஜமாத் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் தனித்தனியாக மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், மேலப்பாளையம் ஜின்னா திடலில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மைதானத்தில் சிறு குழந்தைகள் விளையாடி வந்தனர். தற்போது இந்த விளையாட்டு மைதானம் சேதமடைந்துள்ளது. இதை சரி செய்ய வேண்டும் என பலமுறை கோரிக்கை மனு கொடுத்தோம். இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் அந்த மைதானத்தில் சமுதாயக்கூடம் கட்டப்போவதாகவும் தகவல் வந்துள்ளது. அந்த விளையாட்டு மைதானத்தை சீரமைத்து கொடுக்க வேண்டும். வேறு திட்டப்பணிகளுக்கு பயன்படுத்தக்கூடாது’ என்று கூறப்படுகிறது.

உற்சவர் சிலைகள்

நெல்லை டவுன் தடிவீரன் கோவில் மேல தெருவை சேர்ந்த இந்து அமைப்பினர் கொடுத்த மனுவில், நெல்லை டவுன் தடிவீரன் கோவில் மேலத்தெருவில் கன்னி விநாயகர், சுந்தர்ராட்சி அம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. இங்கு திருப்பணி நடந்தது. அதனால் கோவில்களில் இருந்த உற்சவர் சிலைகள் நெல்லையப்பர் கோவிலில் வைக்கப்பட்டுள்ளன. அந்த சிலைகளை எடுத்து ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடத்த சிரமமாக உள்ளது. தற்போது கோவில்கள் சீரமைப்பு பணிகள் முடிவடைந்துவிட்டது. அதனால் உற்சவர் சிலைகளை நிரந்தரமாக அந்த கோவில்களுக்கு கொடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பொருளாளர் மைதீன், துணை செயலாளர் பர்கிட் சேட், கிளை தலைவர் பீர் முஜ்பூர் ரகுமான் உள்ளிட்டோர் மனு கொடுத்தனர். அதில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. கொரோனா ஊரடங்கால் ரெயில் நிலையம் அருகில் இருந்த கழிப்பிடம் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு பஸ், ரெயில் இயக்கப்படுவதால் வெளியூர் பயணிகள் மற்றும் கார்களில் வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் இயற்கை உபாதை கழிப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆகவே அந்த பகுதியில் மொபைல் கழிப்பிடம் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

வன்னிக்கோனேந்தல் அருகே உள்ள கூவாச்சிப்பட்டியைச் சேர்ந்த கிராம மக்கள் கொடுத்த மனுவில், ‘ தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களை பணிக்கு அழைக்க மறுக்கிறார்கள். எனவே பாரபட்சம் இன்றி அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்’ என்று தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாகர்கோவிலில் வீடுகள், கடைகளை இடிப்பதை கண்டித்து போராட்டம் கலெக்டர் அலுவலகத்தில், வணிகர்கள் மனு
நாகர்கோவிலில் வீடுகள், கடைகளை இடிப்பதை கண்டித்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என கலெக்டர் அலுவலகத்தில் வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.
2. பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது புதுவை கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
புதுவையில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள், பழங்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதேபோல் பூஜை பொருட்கள் விற்பனையும் களைகட்டியது. பொருட்கள் வாங்க மார்க்கெட் வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
3. மத வன்முறையை தூண்டியதாக நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீஸ்
மத வன்முறையை தூண்டியதாக நடிகை கங்கனா ரணாவத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
4. நெல்லையில் கல்லறைகளை சேதப்படுத்தியவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்
நெல்லையில் கல்லறைகளை சேதப்படுத்தியவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று அனைத்து கட்சியினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
5. குலவணிகர்புரம் ரெயில்வே மேம்பால பணியை உடனே தொடங்க வேண்டும் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு
பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரெயில்வே மேம்பால பணியை உடனே தொடங்க வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.