60 பேர் இடமாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தை ஒப்பந்த பணியாளர்கள் முற்றுகை
சேலம் மாவட்டத்தில் ஒப்பந்த பணியாளர்கள் 60 பேர் இடமாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தை ஒப்பந்த பணியாளர்கள் நேற்று முற்றுகையிட்டனர்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் பிரதமரின் வேளாண்மை நிதி உதவி திட்டத்தில் நடந்த மோசடி குறித்து சேலம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட் டத்தில் மட்டும் ரூ.6 கோடி வரை மோசடி நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக 51 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வேளா ண்மை துறையில் ஆத்மா திட் டத்தின் கீழ் ஒப்பந்த அடிப் படையில் சேலம் மாவட் டத்தில் பணியாற்றி வரும் 60 பேர் திடீரென வெவ் வேறு ஊர்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனை கண்டித்தும், இடமாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரியும் சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் இடமாற்றம் உத்தரவுக்கு தடை விதித்துள்ளனர்.
இதனிடையே, தமிழ்நாடு அரசு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலர் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் இடமாற்றம் செய்யப்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் 60 பேர், நேற்று சேலம் டவுன் பகுதியில் உள்ள வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் இணை இயக்குனர் அலுவல கத்தை முற்றுகையிட்டனர்.
இதையறிந்த இணை இயக்குனர் கணேசன், முற்று கையிட்ட அனைவரையும் அழைத்து விசாரணை செய்தார். அப்போது இட மாற்றம் செய்யப்பட்டவர்கள் இணை இயக்குனர் கணேசனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், இடம் மாற்றம் உத்தரவை திரும்பப் பெற வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில் இடமாற்றம் செய்வது தவறு, என முறையிட்டனர்.
இதையடுத்து வேளாண்மை இணை இயக்குனர் கணேசன் அனைவரையும் சமாதானம் செய்து இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என தெரிவித்தார். அதன்பிறகு முற்றுகையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சேலம் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தை ஒப்பந்த பணியாளர்கள் திடீரென முற்றுகையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story