மாவட்ட செய்திகள்

குடிமங்கலம் அருகே, சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் கைது + "||" + Near Kudimangalam, a youth was arrested for trying to abuse a girl

குடிமங்கலம் அருகே, சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் கைது

குடிமங்கலம் அருகே, சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் கைது
குடிமங்கலம் அருகே சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
குடிமங்கலம்,

குடிமங்கலம் அருகே உள்ள ராவணாபுரத்தைச் சேர்ந்தவர் சக்கரையன். இவரது மகன் சந்தோஷ் (வயது 26) திருமணமானவர். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு மிரட்டல் விடுத்து தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவரை கைது செய்ய கோரி பொள்ளாச்சி-தாராபுரம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இச்சம்பவம் குறித்து உடுமலை மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை நடத்தி வந்தார். உடுமலை போலீசார் சந்தோசை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

மேலும் விசாரணையில் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.