மார்க்கெட்டில் பிடித்த தீ 45 மணி நேரம் போராடி அணைப்பு


மார்க்கெட்டில் பிடித்த தீ 45 மணி நேரம் போராடி அணைப்பு
x
தினத்தந்தி 7 Oct 2020 1:56 AM IST (Updated: 7 Oct 2020 1:56 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் மார்க்கெட்டில் உள்ள வணிக வளாகத்தில் பிடித்த தீ 45 மணி நேரம் போராடி அணைக்கப்பட்டது.

மும்பை,

மும்பை மஜித் பந்தர், ஜூம்மா மசூதி அருகே கட்லரி மார்க்கெட்டில் உள்ள 3 மாடி வணிக வளாக கட்டிடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. முதலில் சிறிய அளவிலான தீ விபத்து என்று தான் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கட்டிடத்தில் துணி குடோன்கள், கட்லரி, ரசாயன பொருட்கள் அதிகளவில் இருந்ததால் தீ பிடித்தவுடன் அங்கு அதிகளவில் புகை வெளியேறியது. இதனால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் தீ சிறிது கட்டுக்குள் வந்தது. ஆனால் மீண்டும் தீ கரும்புகையுடன் எரிந்தது.

45 மணி நேரம்

இந்தநிலையில் நேற்றும் தீ அணைக்கும் பணி நீடித்தது. இந்த பணியில் 17 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. பிற்பகலில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அணைக் கப்பட்டது. 45 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டு இருக்கிறது.

மும்பையில் கடந்த 2012-ம் ஆண்டு தலைமை செயலகத்தில் (மந்திராலயா) ஏற்பட்ட தீயை அணைக்கும் பணி நீண்ட நேரம் நடந்தது. அதன்பிறகு தற்போது மார்க்கெட் கட்டிடத்தில் பிடித்த தீயை அணைக்க நீண்ட நேரம் ஆகி உள்ளது.

இந்த தீயணைப்பு பணியில் ஈடுபட்ட 2 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.

Next Story