தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய கோரி சுஷாந்த் சிங் சகோதரிகள் ஐகோர்ட்டில் மனு
தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய கோரி சுஷாந்த் சிங்கின் சகோதரிகள் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளனர்.
மும்பை,
நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அவரது காதலி ரியா சக்ரவர்த்தி, சோவிக் உள்ளிட்டவர்களை கைது செய்து உள்ளனர்.
இதற்கிடைய சுஷாந்த் சிங்கிற்கு போலி மருந்து சீட்டுகள் மூலம் தடை செய்யப்பட்ட மருந்துகள் வாங்கி கொடுத்ததாக அவரது சகோதரிகள் மற்றும் டெல்லியை சேர்ந்த டாக்டர் தருண் குமார் மீது ரியா மும்பை போலீசில் கடந்த மாதம் புகார் அளித்து இருந்தார். இந்த புகார் குறித்து மும்பை போலீசார் சுஷாந்தின் சகோதரிகள் பிரியங்கா சிங், மீத்து சிங் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
ரத்து செய்ய வேண்டும்
இந்தநிலையில் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சுஷாந்த் சிங்கின் சகோதரிகள் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளனர். அதில் தங்களது மீது பதியப்பட்டு உள்ள எப்.ஐ.ஆர். தவறானது என்றும், நாங்கள் மூன்றாவது நபரிடம் இருந்து மருந்து வாங்கி கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட டாக்டர் தடை செய்யப்பட்ட மருந்துகளை பரிந்துரைக்கவில்லை என்றும் தெரிவித்து உள்ளனர்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :
Next Story