மாவட்ட செய்திகள்

தென்காசி அருகே ரூ.20 லட்சம் செலவில் வணிக வளாகம் + "||" + Commercial complex near Tenkasi at a cost of Rs. 20 lakhs

தென்காசி அருகே ரூ.20 லட்சம் செலவில் வணிக வளாகம்

தென்காசி அருகே ரூ.20 லட்சம் செலவில் வணிக வளாகம்
தென்காசி அருகே ரூ.20 லட்சம் செலவில் வணிக வளாகம் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
தென்காசி,

தென்காசி அருகே உள்ள மேலகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் சி.ஆர்.டி.எப். நிதியின் கீழ் ரூ.20 லட்சம் செலவில் வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. கள அலுவலர் ஜான் கேபிரியேல் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, வணிக வளாகத்திற்கான அடிக்கல் நாட்டினார்.


நிகழ்ச்சியில் கள மேலாளர் திரவியகுமார், மேற்பார்வையாளர் வரதராஜன், அ.தி.மு.க. மேலகரம் செயலாளர் கார்த்திக் குமார், தென்காசி நகர செயலாளர் சுடலை, அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் நெல்லை முகிலன், கூட்டுறவு சங்க இயக்குனர் மயில் வேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழ்ப்பல்கலைக்கழகம் சார்பில் ரூ.3 கோடியில் யோகா வளாகம் விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் சார்பில் மருத்துவக்கல்லூரி-வல்லம் சாலையில் ரூ.3 கோடியே 77 லட்சம் மதிப்பில் யோகா வளாகம் கட்டப்படுகிறது. விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.