குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: வேடம் அணியும் பக்தர்களுக்கு அலங்கார பொருட்கள் தயாரிப்பு பணிகள் மும்முரம் + "||" + Kulasekaranpattinam Dasara Festival: Preparation of decorative items for the devotees in costume is in full swing
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: வேடம் அணியும் பக்தர்களுக்கு அலங்கார பொருட்கள் தயாரிப்பு பணிகள் மும்முரம்
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்களுக்கு கிரீடம், சடைமுடி உள்ளிட்ட விதவிதமான பொருட்கள் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
உடன்குடி,
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா வருகிற 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 26-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. தசரா விழாவை காண்பதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள்.
தற்போது கொரோனா ஊரடங்கையொட்டி கோவில் பூசாரி கையினால் பக்தர்களுக்கு மாலை அணிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் தங்களுக்கு தாங்களாகவே மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். இதுவரை சுமார் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் விரதத்தை தொடங்கி உள்ளனர்.
அலங்கார பொருட்கள்
வருகிற 17-ந் தேதி கோவிலில் கொடி ஏற்றும் விழா நடந்ததும் பக்தர்கள் தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து அம்மன் பெயரில் ஊர் ஊராக சென்று தர்மம் எடுத்து கோவிலில் கொண்டு சேர்ப்பதுதான் தசரா திருவிழாவில் சிறப்பு அம்சம் ஆகும். இதில் கடும் விரதம் இருந்து காளி வேடம் அணியும் பக்தர்களுக்காக கிரீடம், நெற்றிப்பட்டை, சடைமுடி, கண்மலர், திரிசூலம், ஒட்டியாணம் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடக்கிறது.
மேலும் முருகன், பிள்ளையார், அம்மன், சிவன், பார்வதி, சரஸ்வதி, சக்தி, நாரதர், அனுமன், ராமர், பஞ்சபாண்டவர்கள், சுடலை மாடன், இசக்கி அம்மன் உள்பட பல்வேறு சுவாமி வேடம் அணிவதற்கு தேவையான அனைத்து பொருட்களையும், பெண் வேடம் அணியும் பக்தர்கள் இரட்டைச்சடை, ஒத்த ஜடை மற்றும் அலங்கார முடிகள் தயாரிக்கும் பணியிலும் உடன்குடி, பரமன்குறிச்சி பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ள னர். இந்த பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூறுகையில், “மனிதனுக்கு அழகு சேர்ப்பது ஆள் பாதி ஆடை பாதி என்பதை போல பக்தனுக்கு விதவிதமான அலங்கார பொருட்கள்தான் அழகு சேர்க்கும். ஒரு சில சுவாமி வேடங்களை பார்க்கும்போது தெய்வமே நேரில் வந்தது போல் இருக்கும். இதற்கெல்லாம் காரணம் அலங்கார பொருட்கள்தான். தற்போது கொரோனா காரணமாக அலங்கார பொருட்கள் ஆர்டர் தருவது மிக மிகக் குறைந்துள்ளது. இருந்தாலும் தசரா திருவிழா அம்மன் அருளால் கோலாகலமாக நடைபெறும் என்பதை மனதில் வைத்து நாங்கள் இத்தொழிலை தீவிரமாக செய்து வருகிறோம்“ என்றனர்.
தைப்பூசத்தையொட்டி மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் தைப்பூசத் தெப்பத்திருவிழா நேற்று தொடங்கியது. அதேபோல் வடபழனி முருகன் கோவிலிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.