மருத்துவர் அணி துணை தலைவராக நியமிக்கப்பட்ட டாக்டர் எ.வ.வே.கம்பனுக்கு தி.மு.க. நிர்வாகிகள் வாழ்த்து
தி.மு.க.மருத்துவர் அணி துணை தலைவராக நியமிக்கப்பட்ட டாக்டர் எ.வ.கம்பனுக்கு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
திருவண்ணாமலை,
தி.மு.க. மருத்துவர் அணி துணைத் தலைவராக டாக்டர் எ.வ.வே. கம்பன் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார். இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மருத்துவர் அணி துணை தலைவராக நியமிக்கப்பட்ட டாக்டர் எ.வ.வே. கம்பனை மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை நிர்வாகிகள் உள்பட பலர் நேரில் சந்தித்து சால்வைகள், மாலைகள், கைத்தறி ஆடைகள் மற்றும் புத்தகங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் ரா.ஸ்ரீதரன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், திருவண்ணாமலை ஒன்றியக் குழு தலைவர் கலைவாணிகலைமணி, ஒன்றிய செயலாளர்கள் மு.பன்னீர்செல்வம் (தண்டராம்பட்டு மேற்கு), கோ.ரமேஷ் (தண்டராம்பட்டு கிழக்கு), ரமணன் (திருவண்ணாமலை கிழக்கு), மாரிமுத்து (திருவண்ணாமலை மேற்கு), மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பொன்.முத்து,
மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வக்கீல் கே.வி.மனோகரன், துணை அமைப்பாளர்கள் ஜி.புகழேந்தி, டி.எம்.கதிரவன், வீனஸ் குமரேசன், என்.முரளி, வெற்றி ரா.கார்த்திகேயன், ஆர்.செல்வராஜ், மருத்துவ அணி மாவட்ட துணை அமைப்பாளர் டி.எம்.கலையரசு, அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் ஏ.ஏ. ஆறுமுகம், தண்டராம்பட்டு ஒன்றிய துணை செயலாளர் எல்.ஐ.சி. வேலு, ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் து.வே.சபாரத்தினம், மாணவரணி துணை அமைப்பாளர் சாத்தனூர் பொன்னுசாமி, தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் து.வே.பிரவீன்குமார், ஒன்றிய கவுன்சிலர் கனிமொழி லோகநாதன், தண்டராம்பட்டு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஆ.மாதேஸ்வரன், திருவண்ணாமலை 25வது வட்ட நிர்வாகி ரமணா ஜி.பழனி உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story