செஞ்சியில், அடகு கடைகளில் கைவரிசை காட்டிய 3 கொள்ளையர்கள் கைது - மேலும் 3 பேருக்கு வலைவீச்சு


செஞ்சியில், அடகு கடைகளில் கைவரிசை காட்டிய 3 கொள்ளையர்கள் கைது - மேலும் 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Oct 2020 10:45 AM IST (Updated: 7 Oct 2020 11:01 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சியில் அடகுகடைகளில் கைவரிசை காட்டி வந்த 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களது கூட்டாளிகள் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

செஞ்சி,

செஞ்சி அடுத்த மேல்பாப்பாம்பாடி பகுதியில் நல்லான்பிள்ளை பெற்றாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், விக்கிரவாண்டி அடுத்த வெள்ளேரிப்பட்டை சேர்ந்த பாண்டுரங்கன் மகன் சத்தியமூர்த்தி (வயது 27), அதே ஊரை சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் அருணாசலம் (43) என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், இரவு நேரங்களில் அடகு கடைகளில் கதவை உடைத்து திருடி வந்தது தெரியவந்தது.

இதில் 6 பேர் கொண்ட கும்பலுடன் பாலப்பாடி, வெள்ளரிப்பட்டு பகுதியில் இயங்கிய அடகு கடையில் கதவை உடைத்து திருடியதாகவும் தெரிவித்தனர். அவர்கள் கூறிய தகவலின் பேரில் கூட்டாளியான வெள்னேரிப்பட்டை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் மணிகண்டன் (35) என்பவரையும் போலீசார் பிடித்தனர். தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ. 10 ஆயிரம், 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதில் தலைமறைவாக உள்ள கூட்டாளிகளான மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story