கர்நாடகத்தில் வைரஸ் தொற்றுக்கு மேலும் 113 பேர் பலி பெங்களூருவில் மட்டும் ஒரேநாளில் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா + "||" + Another 113 killed in Karnataka virus outbreak in Bangalore alone
கர்நாடகத்தில் வைரஸ் தொற்றுக்கு மேலும் 113 பேர் பலி பெங்களூருவில் மட்டும் ஒரேநாளில் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 113 பேர் பலியாகியுள்ளதாகவும், தலைநகர் பெங்களூருவில் மட்டும் ஒரேநாளில் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 6 லட்சத்து 57 ஆயிரத்து 705 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 10 ஆயிரத்து 947 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் கர்நாடகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 68 ஆயிரத்து 652 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 113 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9,574 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 55 பேர், தட்சிண கன்னடாவில் 7 பேர், ஹாசனில் 5 பேர், மைசூருவில் 9 பேர், கொப்பலில் 5 பேர், துமகூருவில் 5 பேர், உத்தர கன்னடாவில் 7 பேர் உள்பட 113 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் நேற்று 1 லட்சத்து 4 ஆயிரத்து 348 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 55 லட்சத்து 24 ஆயிரத்து 302 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன.
ஒரேநாளில் 9,832 பேர் குணம் அடைந்தனர். இதன் மூலம் மாநிலத்தில் குணம் அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 42 ஆயிரத்து 906 ஆக அதிகரித்துள்ளது. 1 லட்சத்து 16 ஆயிரத்து 153 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இதில் 841 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.