மாவட்ட செய்திகள்

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு ஆர்.ஆர்.நகர்-குசுமா ரவி; சிரா- டி.பி.ஜெயச்சந்திரா + "||" + Karnataka Assembly By-Election: Congress Candidates Announcement RR Nagar-Kusuma Ravi; Chira- TP Jayachandra

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு ஆர்.ஆர்.நகர்-குசுமா ரவி; சிரா- டி.பி.ஜெயச்சந்திரா

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு ஆர்.ஆர்.நகர்-குசுமா ரவி; சிரா- டி.பி.ஜெயச்சந்திரா
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆர்.ஆர்.நகரில் குசுமா ரவியும், சிராவில் டி.பி.ஜெயச்சந்திராவும் போட்டியிடுகிறார்கள்.
பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள ராஜராஜேஸ்வரிநகர் (ஆர்.ஆர்.நகர்), சிரா ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன. சிரா தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த சத்யநாராயணா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். ராஜராஜேஸ்வரிநகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை முனிரத்னா ராஜினாமா செய்தார். இதனால் இந்த 2 தொகுதிகள் சட்டசபையில் காலியாக இருக்கின்றன. இந்த 2 தொகுதிகளுக்கு வருகிற நவம்பர் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.


அரசியல் கட்சிகள் இன்னும் தங்களின் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. சிரா தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. சத்யநாராயணாவின் மனைவி அம்மஜம்மா நிறுத்தப்பட உள்ளதாக அக்கட்சி கூறியுள்ளது. இந்த நிலையில் கர்நாடக காங்கிரஸ் கட்சி, 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில், குசுமா ரவியும், சிராவில் முன்னாள் மந்திரி டி.பி.ஜெயச்சந்திராவும் போட்டியிடுகிறார்கள். ஜெயச்சந்திரா, சித்தராமையா ஆட்சியில் சட்டம் மற்றும் சட்டசபை விவகாரத்துறை மந்திரியாக பணியாற்றினார்.

டி.கே.ரவியின் மனைவி

குசுமா ரவி, 5 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவியின் மனைவி ஆவார். அவர் தனது கணவர் இறந்த பிறகு அமெரிக்காவிற்கு சென்று 2 ஆண்டுகள் மேல் படிப்பை முடித்துவிட்டு திரும்பியுள்ளார். அவரது தந்தை ஹனுமந்தராயப்பா, காங்கிரசில் இருந்து ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு சென்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தனது மகளுடன் காங்கிரசில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொகுதி ஒதுக்கீட்டில் விரைவில் இறுதி முடிவு; காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வீரப்ப மொய்லி நம்பிக்கை
‘தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொகுதி ஒதுக்கீட்டில் விரைவில் இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கிறோம்’ என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வீரப்ப மொய்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2. தேர்தலில் டெபாசிட் தொகை கட்ட பொதுமக்களிடம் கையேந்திய வேட்பாளர்கள்
தேர்தலில் டெபாசிட் தொகை கட்ட பொதுமக்களிடம் கையேந்திய வேட்பாளர்கள்.
3. காங்கிரசில் இருந்து வெளியேறி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் லட்சுமி நாராயணன்
காங்கிரசில் இருந்து வெளியேறிய லட்சுமி நாராயணன், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்துள்ளார்.
4. மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் 92 தொகுதிகளில் போட்டி
294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள மாநிலத்தில் வருகிற 27-ந் தேதி முதல் ஏப்ரல் 29-ந் தேதி வரை 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.
5. மீண்டும் பிரச்சினையை ஏற்படுத்தும் ஜி -23 காங்கிரஸ் தலைவர்கள்; பிரதமரை பாராட்டிய குலாம் நபி ஆசாத்
காங்கிரஸ் தலைமைக்கு மீண்டும் பிரச்சினையை ஏற்படுத்தும் ஜி -23 காங்கிரஸ் தலைவர்கள். கடந்த வார இறுதியில் ஜம்முவில் ஒரு கூட்டம் நடத்தினர்