ராதாபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் அறவழி போராட்டம்
ராதாபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் அறவழி போராட்டம் தனுஷ்கோடி ஆதித்தன் பங்கேற்பு.
ராதாபுரம்,
உத்தரபிரதேசத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்திற்கு ஆறுதல் கூறச்சென்ற ராகுல் காந்தியை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து ராதாபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் அறவழி போராட்டம் நடந்தது.
ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில் ராதாபுரம் நகர தலைவர் சேகர் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story